எல்.முருகன் ரிட்டர்ன்.. தமிழிசை எடுத்த ரிஸ்க்! எப்படி இருக்கு நிலவரம்?
பலரும் நீலகிரியில் 2024 மக்களவைத் தேர்தலில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று பேசி வந்த நேரத்தில், அவர் திடீரென்று மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது பாஜக பிரதமர் மோடி, 'பாருங்கள் தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் நாங்கள் ஒரு தமிழருக்கு வாய்ப்பு அளித்துள்ளோம்' என்றார்.

இனிமேல் எல்.முருகனின் கதவு அடைக்கப்பட்டு விட்டது என்றே பலரும் கருதி வந்தனர். அப்படியான நிலையில் இப்போது மீண்டும் நீலகிரியில் பாஜக சார்பாக முருகன் போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைமை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த வாய்ப்பு குறித்து இன்று பேசிய எல்.முருகன், 'நீலகிரி பாஜகவுக்கு மிக முக்கியமான தொகுதி. ஊழல்வாதியை எதிர்த்துப் போட்டியிடக் கட்சித் தலைமை எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது. தமிழனுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய ஊழல். அந்த ஊழல்வாதியை நிச்சயம் வென்று காட்டுவேன்' என்று கூறியிருக்கிறார்.
அவர் சொல்வதைப் போன்று பாஜகவுக்கு நீலகிரி முக்கியமான தொகுதிதான். கடந்த 1998இல் பாஜக நீலகிரியில் வெற்றி பெற்றுள்ளது. 99இல் கூட பாஜகவைச் சேர்ந்த மாஸ்டர் மதன் தான் வெற்றி பெற்றார்.
1971இல் திமுக நீலகிரியில் வென்றது. அதன்பிறகு 2019இல் தான் திமுக மீண்டும் அந்தத் தொகுதியைக் கைப்பற்றியது. கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் திமுக நீலகிரியில் சீனிலேயே இல்லை. அந்த நிலைமையை ஆ.ராசாதான் போக்கினார்.
அவர் மத்திய அமைச்சரான பிறகு நீலகிரியை 'குறி'வைத்துப் பல வசதிகளைச் செய்து தந்தார். திட்டங்களைச் செய்தார். நீலகிரியில் ராசாவுக்கு அப்புறம் திமுகவுக்கு ஒரு முகம் கிடைத்துள்ளது. இப்போதும் கூட நீலகிரியில் ராசாவுக்குக் கணிசமான ஆதரவு உள்ளது என்றே தகவல்கள் கிடைக்கின்றன.
அதாவது அதற்கு இணையாக எல்.முருகனும் அங்கே தங்கி கட்சி பணிகளைத்தான் செய்துள்ளார். அந்தத் தொகுதிக்கு என்று அவர் எதையும் செய்து விடவில்லை. ஏனெனில் ஒரு மத்திய இணையமைச்சராக தனக்கு ஆதரவாகத் தொகுதி மக்களை ஒருங்கிணைத்து வந்தார்.
ஆகவே, அவரது ஒருங்கிணைப்பு என்பது கட்சி ரீதியானது. அவர் திட்டங்கள் அடிப்படையில் மக்களைச் சென்று அடையவில்லை. ஆகவே, ஓட்டுக்களாக அவர் பக்கம் எந்தளவுக்கு விழும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். இன்றைய நிலவரப்படி முருகனுக்குப் பிரகாசமான வாய்ப்புகள் இல்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
இந்த 2024 மக்களவைத் தேர்தலில் முருகன் போட்டியிடுவது எனத் திட்டமிட்டிருந்த போது, அவரை ஏன் பிறகு ராஜ்ய சபாவுக்கு வேறு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? அவருக்குப் பதில், அந்த மாநிலத்தில் உள்ள பாஜக நிர்வாகி ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாமே? அதில் பாஜக தலைமை ஏன் குழம்பியது எனப் புரியவில்லை.
இப்போது மீண்டும் அவரை நீலகிரியில் நிறுத்தியதன் மூலம் அவருக்கு ஒரு நெருக்கடிதான் உருவாகி உள்ளது. அவர் ஒருவேளை வெற்றி வாய்ப்பை இழந்தால், அது பலரது விமர்சனத்திற்கு உள்ளாகும். அவரைத் தாண்டி கட்சித் தலைமைக்கே அது அடியாகக் கூட அமையலாம் என்கிறார்கள்.
முருகனின் விசயத்தில் ஏற்பட்ட குழப்பத்தைப் போன்றே தமிழிசை விவகாரத்திலும் ஏற்பட்டுள்ளது. இம்முறை மீண்டும் தூத்துக்குடியில் களம் காண்பார் என்பதே மீடியா கணிப்பு. அதற்கான செய்தியையும் மக்களிடம் பரவலாக ஊடகங்கள் சில மாதங்களாகக் கொண்டு போய் சேர்த்தன.
அதையே மைலேஜ் ஆக வைத்து அவரை அங்கே வேட்பாளராக்கி இருக்கலாம். அங்கே நாடார் ஓட்டுகள் அதிகம். ஆகவேதான் கனிமொழி அங்கே களம் இறக்கப்பட்டார் என்பது உலகத்திற்கே தெரிந்த தகவல். அது பாஜகவுக்குத் தெரியாதா என்ன?
தூத்துக்குடி என்பது தமிழிசைக்கு ஆதரவு மிக்க தொகுதி. அவரை தென் சென்னையில் நிற்க வைத்தது தவறான கணக்கு. இங்கே தமிழச்சி தங்க பாண்டியன் திமுக சார்பில் மீண்டு போட்டியிடுகிறார்.
அவருக்கு எதிர்ப்புகள் அதிகம் இல்லை. அப்படி 2வது இடத்தையாவது தமிழிசை பிடிப்பாரா என்றால், அதுவும் சந்தேகம் தான். ஜெயக்குமார் மகன் அந்தத் தொகுதியில் அறிமுகமான வேட்பாளர். இவர் ஒருமுறை வென்றுள்ளார். ஒருமுறை தோல்வியைத் தழுவி உள்ளார். 2019இல் 3,02,649 வாக்குகளைப் பெற்றவர்.

அங்கே கொண்டு போய் தமிழிசையை இறக்கி உள்ளனர். இந்தத் தொகுதியில் பிராமணர்கள் ஓட்டு கணிசமாக உள்ளது. அது பாஜகவுக்குக் கட்டாயம் கிடைக்கும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் தொகுதியில் உள்ள பிராமணர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது.
தூத்துக்குடி இல்லை என்றால், புதுச்சேரியில் தமிழிசையை நிறுத்தி இருக்கலாம். அவர் அங்கே ஆளுநராக இருந்தவர். அதன் மூலம் ஒரு செல்வாக்கு கிடைத்து வெற்றி கூடப் பெற்றிருப்பார்.
ஆனால், இங்கே நிர்மலா சீதாராமன் நிறுத்தப்படலாம் என்கிறார்கள். புதுச்சேரி விநோதமான தொகுதி. காரைக்கால், மாஹி,ஏனம் எனச் சிதறிக்கிடக்கும் பகுதிகளில் லட்சக் கணக்கில் வாக்குகள் உள்ளன.
சுற்றிச் சுற்றி கணக்குப் போட்டாலும் முருகன் ரிட்டர்ன் மற்றும் தமிழிசை எடுத்துள்ளது பெரிய ரிக்ஸ் ஆகவே தெரிகிறது என்கிறார்கள்.
தமிழிசை கூட தூத்துக்குடி கிடைக்காத வருத்தத்தில்தான் உள்ளார் என்கிறனர். அவரும் மண்ணின் மைந்தராக நின்று வெற்றி பெற்று அதை ஒரு சாதனையாக மாற்றி இருக்கலாம். அதுவும் மிஸ் ஆகிவிட்டது.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications