For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்... வாசன் கட்சி 'என்டர்' ஆகுமா.. அல்லது 'பாஸ்' சொல்லுமா?

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. எனவே போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் வந்த வாசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் விருப்பத்துக்காக தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனை, மக்கள் பணிகளை முன்நிறுத்தி பணிகள் மேற்கொள்ளப்படும்.

Will TMC contest in Srirangam bye election?

த.மா.கா. மாவட்ட மாநில நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். மின்தடையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து போராட்டம் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

குஷ்புவை காங்கிரசில் சேர்த்தது அவர்களுடைய விருப்பம். அதனால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் வாசன்.

English summary
TMC chief G K Vasan has said that his party will decide on Srirangam bye election after the dates announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X