காவிரி: இன்னும் 3 நாட்களில் கடை மடைக்கு நீர் வரும்.. முதல்வர் பழனிசாமி உறுதி
காவிரி நீர், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கடை மடை பகுதிக்கு சென்றடையும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
கோவை: காவிரி நீர், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கடை மடை பகுதிக்கு சென்றடையும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அவருடன் தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் வெள்ள பகுதிகளை பார்வையிட்டனர். இந்த நிலையில் கோவையில் இருந்து சென்னை கிளம்பினார் தமிழக முதல்வர் பழனிசாமி.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். காவிரி பிரச்சை, பவானி வெள்ளம் என்று பல விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.
அதில், பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.
வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புதுப்பித்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் வடிந்தவுடன் பயிர் சேதம் கணக்கிடப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தரப்படும்.
மழை நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கடலில் கலக்கும் நீரை சேமிக்க தடுப்பணை கட்டுவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. தடுப்பணை கட்டுவது குறித்து குழு அறிக்கை அளித்ததும் முடிவு.
காவிரியில் அதிக அளவில் வெள்ளம் வருகிறது. எல்லா அணைகளும் நிரம்பி வழிகிறது. காவிரி நீர், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கடை மடை பகுதிக்கு சென்றடையும் என்றுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications