ஸ்ரீரங்கம் தேர்தல்: வாக்குகள், வாக்கு சதவீதம்.. இரண்டிலும் ஜெ.வை முந்தி சாதனை படைத்த வளர்மதி!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு வித்தியாசத்தை முறியடித்து வெற்றி பெற்றுள்ளார் இடைத்தேர்தல் வேட்பாளர் வளர்மதி.
2011 சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1,05,328 வாக்குகள் பெற்றார். தற்போதையே இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி 1,51,561 ஆகும். இது ஜெயலலிதா வாங்கியதை விட 46,233 வாக்குகள் அதிகமாகும்.
கடந்த தேர்தலில் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில், 41,488 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆனந்த்தை வீழ்த்தியிருந்தார். இந்தத் தேர்தலில் வளர்மதி, ஆனந்த்தை 96,515 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

எனவே இரண்டு வகையிலும் ஜெயலலிதாவை முந்தி சாதனை படைத்துள்ளார் வளர்மதி.
சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறைதண்டனை வழங்கப்பட்ட காரணத்தினால், தேர்தல் விதிகளின்படி தன்னுடைய பதவியை இழந்தார் ஜெயலலிதா.
இதனையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கான இடைத்தேர்தல் கடந்த 13 ஆம் தேதியன்று நடைபெற்று, வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 1,51561 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கனவே பிரச்சாரத்தின்போதே இடைத்தேர்தலில் வெற்றியும் பெற வேண்டும்; அதே நேரத்தில் ஜெயலலிதாவினை விட அதிக வாக்குகளும் பெற்றுவிடக் கூடாது என்ற பதைபதைப்பில் இருந்து வந்தனர் அதிமுகவினரும், அதிமுக வேட்பாளரான வளர்மதியும். ஆனால், அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதாவே வளர்மதியினை தன்னைவிட அதிகமாக வாக்குகள் பெற்று இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ஊக்குவித்திருந்தார். இதையடுத்து அதிமுகவினர் தீவிரமாக "உழைத்ததன்" பலனாக அதிக அளவிலான வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications