ஜெ.வின் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியில் 500 போலீசார்- தொடரும் சர்ச்சை!
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் பங்களாவில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்டில் 500 போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி மறைந்த பின்னரும் சென்னை போயஸ் கார்டன் பங்களாவில் 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து கணிசமான எண்ணிக்கையில் போலீசார் போயஸ் கார்டன் பங்களா பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர். அங்கு தனியார் நிறுவன பணியாளர்கள் அதிக அளவில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா மற்றும் கொடநாடு எஸ்டேட் ஆகியவற்றில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் உளவுத்துறை மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மொத்தம் 150 பேர் பணியில் தொடர்கின்றனர். இதேபோல் சிறுதாவூர் பங்களாவில் 250 போலீசார் பணியில் உள்ளனர். இந்த பாதுகாப்பையும் விலக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications