சீசனே முடியலை.. ரெஸ்ட் எடுக்கும் காற்றாலைகளால் மின்வெட்டு பீதி
நெல்லை: சீசன் முடிவடையாத நிலையில் காற்றாலைகளின் மின் உற்பத்தி குறைந்து போயிருப்பதால் பல மணிநேர மின்வெட்டு மீண்டும் அமலுக்கு வருமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆரல்வாய்மொழி, தேனி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 10,000க்கும் மேற்பட்ட காற்றாலை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மொத்த நிறுவு திறன் 7, 300 மெகா வாட்.

தமிழகத்தில் ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி காலம். இப்படி உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழக மின்சார வாரியம் ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 கொடுத்து வாங்கி வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காற்றின் வேகம் குறைந்து வருவதால் சீசன் முடிவடைவதற்கு முன்பே காற்றலை மின் உற்பத்தி சரிவை சந்தித்து வருகிறது. தற்போது காற்றாலை மூலம் கடந்த 3 நாட்களாக 500 முதல் 700 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வருகிறது.
இதுவே கடந்த வாரத்தில் 100 மெகா வாட் என்ற நிலையில் கூட இருந்தது. தற்போது கூடங்குளத்தில் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதே போல வடசென்னை 600, எண்ணூர் 300 மெகா வாட் என தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 1450 மெகா வாட் மின்சாரம் கிடைக்காமல் முடங்கியுள்ளது. இதனால் மீண்டும் மின்வெட்டு தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பீதி எழுந்துள்ளது..
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications