ஜெ., நலம்பெற வேண்டி பால்குடம் எடுத்த 6 பெண்கள் மயக்கம் - ஒருவர் மரணம்
திருவண்ணாமலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பால் குடம் எடுத்து வந்த 60 வயது மூதாட்டி மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானார். மேலும் 6 பெண்கள் மயக்கமடைந்தனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்த பெண் கூட்டநெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். பால்குடம் எடுத்த 10,000 பேரில் 6 பெண்கள் மயக்கமடைந்தனர். ஒருவர் உயிரிழந்ததை அடுத்து ஐவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல்நலக்குறைவினால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கோவில் கோவிலாக பல்லாயிரக்கணக்கில் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பச்சையம்மன் கோவிலில் 10,000 பேர் பால்குடம் எடுத்தனர். இவர்களில் 6 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். அனைவரையும் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில் மயக்கமடைந்த 60வயது மதிக்கத்தக்க கமலாம்பாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த வாரம் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிபாட்டு நிகழ்ச்சியில், சாமி வந்து ஆடிய பொன்னுத்தாய், குலவை போட்டபடியே திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications