தூத்துக்குடியில் பரிதாபம்.. ஆலைக் கழிவில் சிக்கி பெண் பரிதாப மரணம்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொழிற்சாலை ஆலைக் கழிவில் சிக்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக காலமாகிவிட்டார். இவரது மனைவி சாந்தி, இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.
தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக சாந்தி கழிவு காகிதங்கள் எடுத்து அதன்மூலம் பெறும் வருமானத்தில் தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குப்பைகளை சேகரித்துள்ளார் அப்போது அப்பகுதியில் இருந்த மணல் பகுதியில் குப்பைகளை சேகரிக்கும்போது அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த நச்சு மணலில் கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சாந்தி தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். இதனையடுத்து சாந்தியின் உறவினர்கள் பலியான சாந்தியின் குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென்பதை வலியுறுத்தினர். இதனையடுத்து தனியார் ஆலை நிர்வாகம் பலியான சாந்தியின் குழந்தைகளுக்கு ரூ3லட்சம் நிவாரணம் வழங்க முன்வந்தது.
இது குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications