குடிக்கப் பணமில்லை, பெண் டாக்டரைக் கொலை செய்தோம்.. திருடர்கள் திகில் வாக்குமூலம்
சென்னை: சென்னையில் பிரபல பெண் டாக்டர் ரோகினியைக் கொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ரோகினியிடமிருந்து திருடிச் சென்ற செல்போனை அவர்கள் பயன்படுத்தியபோது, போலீசாரிடம் அவர்கள் சிக்கியுள்ளனர்.
சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் பங்களா வீட்டில் வசித்து வந்தவர் பிரபல பெண் டாக்டர் ரோகினி. இவருடன் இவரது தாயார் சுபத்ரா, மகள் ரேஷ்மி ஆகியோரும் வசித்து வருகிறார்கள். கடந்த 7ம் தேதி அன்று இரவு 10 கிரவுண்ட் பரப்பளவு கொண்ட தனது வீட்டின் தோட்டப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார் டாக்டர் ரோகினி. அவரது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், தோட்டத்தில் அவரது உடல் கிடந்தது.

இது தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று தனிப்படைகல் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் சிலர் செயல்பட்டதாகவும், அவர்கள் தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என முதலில் சந்தேகம் எழுந்தது.
பின்னர், ரோகினியின் மகள் ரேஷ்மி ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்தக் காதலில் ரோகினிக்கு சம்பந்தமில்லை என்றும் போலீசின் விசாரணையில் தெரியவந்தது. எனவே அது கொலைக்கான காரணமாக இருக்குமா என சந்தேகிக்கப்பட்டது.
ஆனால், கொலை செய்யப்பட்ட ரோகினியின் நகைகளும், செல்போனும் திருடப்பட்டிருந்தது போலீசாரின் விசாரணையை வேறு கோணத்திற்கு மாற்றியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோகினியின் வீட்டுத் தோட்டத்தில் புல் பதிக்கும் பணி நடந்தது தெரியவந்தது. அந்தப் பணிக்காக வந்தவர்கள் இந்தக் கொலையைச் செய்திருக்கலாமா எனப் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் திருடப்பட்ட ரோகினியின் செல்போன் மீண்டும் இயக்கப்படுவது போலீசாருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து செல்போன் காட்டிய சிக்னல் உதவியால், அதைப் பயன்படுத்திய மூன்று பேரைப் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தான் ரோகினி வீட்டு தோட்டத்தில் புல் பதிக்கும் வேலையில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்த அவர்கள் 3 பேரும், சமீபத்தில் 5 நாட்கள் ரோகினி வீட்டுத் தோட்டத்தில் பணி புரிந்துள்ளனர். அப்போது இரவு நேரங்களில் ரோகினி தனது வீட்டுத் தோட்டத்தில் நடமாடுவது குறித்து அவர்களுக்குத் தெரியவந்தது.
மேலும், தோட்டப்பணி செய்தவாறே வீட்டில் பணம் வைக்கப்படும் இடம், அங்கு செல்லும் பாதை போன்றவற்றை அவர்கள் தெரிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 7ம் தேதி மது அருந்த பணம் இல்லாததால், ரோகினி வீட்டிற்கு அவர்கள் திருட வந்துள்ளனர்.
அப்போது அங்கு தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்துள்ளார் ரோகினி. அவரது தலையில் கட்டையால் அடித்த திருடர்கள், மயங்கி விழுந்த அவரது கழுத்தில் ஏறி மிதித்துக் கொன்றுள்ளனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின், காதில் அணிந்திருந்த கம்மல் ஆகியவற்றைக் கொள்ளையடித்த கும்பல், அவரது செல்போனையும் திருடிச் சென்றது.
இரண்டு நாட்கள் அணைத்து வைத்திருந்த செல்போனை நேற்று முதல் இயக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது செல்போன் சிக்னல் மூலம் அவர்களது இருப்பிடத்தைப் போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
ரோகினி கொலை வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த போலீசாருக்கு, கமிஷனர் அசுதோஷ் சுக்லா நேரில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications