சென்னை: மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பலி; பசுமாடும் பலியான சோகம்
சென்னை: சென்னை வியாசர்பாடியில் அறுந்த கிடந்த மின் கம்பியை மிதித்ததால் லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். அவர் அழைத்துச் சென்ற பசுமாடும் மின்சாரம் பாய்ந்து பலியானது. இதேபோல கல்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வியாசர்பாடியைச் சேர்ந்த லட்சுமி மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு வியாசர்பாடியில் பகுதிகளில் உறவினர் ஒருவரின் வீட்டு கிரகப்பிரவேசம் ஒன்றில் பங்கேற்க தன்னுடைய பசுமாடு, கன்றுக்குட்டியை அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை பசுமாடு மிதித்தது. அப்போது மின்சாரம் பாயவே, துடிதுடித்து விழுந்தது. பசுமாட்டினை காப்பாற்றுவதற்காக போன லட்சுமி, மாட்டின் கயிற்றினை கட்டி இழுத்தார். அப்போது லட்சுமி மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லட்சுமியின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து எம்.கே.பி. நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
வியாசர்பாடி பகுதியில் இருபது நாட்களாக வடியாமல் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.
சேதமடைந்த மின்கம்பியை சீரமைக்க கோரி அழைத்தால் மின்வாரியத்துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்கதாகவும் அந்தப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கல்பாக்கத்தில் பெண் மரணம்
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே தென்பட்டினம் கிராமத்திலும் மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி
ஆவடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆவடி, காந்தி நகர் சர்ச் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் பொன்நிலவன் (16). தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பொன்நிலவன் சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்த கணினியை இயக்க மின் வயரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பொன்நிலவன் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். தகவலறிந்த ஆவடி போலீஸார் பொன்நிலவனின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
5 பேர் உயிரிழப்பு
சென்னையில் வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மின்சாரம் தாக்கி பலியாகினர். அந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே தற்போது வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னையில் இதுவரை மின்சாரம் தாக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவே உயிரிழப்பு நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications