காஸ் சிலிண்டர் வாங்குவதில் தள்ளுமுள்ளு.. நெரிசலில் சிக்கி பெண் மயக்கம்
முத்துப்பேட்டை: திருவாரூர் அருகே வரிசையில் நின்று சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெண் ஒருவர் கீழே விழுந்து மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர் பகுதியில் சுமார் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் 4000 பேர் உள்ளனர். இவர்களுக்கு இண்டேன் கேஸ் கோட்டூரில் இருந்தும் எச்.பி கேஸ் திருத்துறைப்பூண்டியில் இருந்தும் வாகனங்களில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதற்காக வீட்டில் டெலிவரி செய்ய உரிய தொகையும் லாரி வாடகையும் சிலிண்டர் வாங்கும் தொகையோடு பெற்று வருகிறார்கள்.
அப்படி வினியோகம் செய்யப்படும் சிலிண்டர்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டு வரும் விநியோகஸ்தர்கள் வீடுகளில் சப்ளை செய்யாமல் ஏதாவது ஒரு இடத்தில் லாரியை நிறுத்தி விநியோகிக்கும் சம்பவங்கள் நடந்து வருவதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடுவதால் அடிக்கடி தள்ளுமுள்ளு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகpறார்கள். இதனை தடுக்க முத்துப்பேட்டையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கேஸ் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்களை வீடுகளில் சப்ளை செய்ய வேண்டும் என்று புகார் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் சென்ற வாரம் திருவாரூரில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமாறனிடம் முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் இதுகுறித்து புகார் மனு ஒன்று கொடுத்தார். அதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும் என்று உறுதி கூறி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையன்று திருத்துறைப்பூண்டி எச்.பி கேஸ் தனியார் ஏஜென்ஸி மூன்று லாரிகளில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு மன்னை சாலை பிள்ளையார் கோவில் எதிர்புறம் திடலில் நிறுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இதில் ஒரே நேரத்தில்
500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்; கூடியதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஜோகரா என்ற பெண் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
உடன் அவரை மருத்தவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு நீண்ட வரிசையில் பொதுமக்கள் பல மணிநேரம் வெயிலில் நின்று சிலிண்டர்களை பெற்று சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications