பிள்ளைங்களாடா நீங்க.. சாப்பாட்டுக்காக அலைய விட்ட மகன்கள்.. வேதனையில் தீக்குளித்தார் தாய்!
பெரியகுளம்: மகன்கள் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு அலைந்ததாலும், தனக்கு முறை வைத்து சாப்பாடு போட்டதால் மனம் உடைந்ததாலும், வேதனை அடைந்த பெண்மணி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது வடுகபட்டி. அங்கு வசித்து வந்தவர் பாண்டியம்மாள். 58 வயதான இவரது கணவர் பெயர் பெரியகருப்பன். இவர்களுக்கு பால் பாண்டி, செல்வம் என இரு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. அதே ஊரிலேயே தனித் தனியாக வசித்து வருகின்றனர்.

இரு மகன்களும் தங்களது பெற்றோருக்கு முறை வைத்து சாப்பாடு போட்டுள்ளனர். அதாவது சாப்பாட்டு நேரத்துக்கு இவர்களின் வீடுகளுக்களுக்குப் போய் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒரு வாரம் ஒரு மகன் வீடு, அடுத்த வாரம் இன்னொரு மகன் வீடு என.
இது பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் வேறு வழியில்லாமல் சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பாண்டியம்மாள் செல்வம் வீட்டுக்கு சாப்பிடுவதற்காகப் போயுள்ளார். ஆனால மருமகள் வீட்டில் இல்லை. கதவைப் பூட்டி விட்டு போய் விட்டார்.
இதனால் பெரும் அவமானமடைந்த பாண்டியம்மாள் கடும் வேதனையில் வீடு திரும்பினார். இந்த வயிற்றுப்பாட்டுக்காக இத்தனை அவமானமா என்று கூனிக் குறுகிய அவர் தீக்குளித்து விட்டார். அவரை தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மனைவியின் சாவுக்கு மகன்களே காரணம் என பெரியகருப்பன் தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிள்ளைங்களாடா நீங்க?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications