மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் கார் மோதி பெண் காயம்
Subscribe to Oneindia Tamil

நேற்று சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே பயணம் செய்து கொண்டிருந்தார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அப்போது எதிர்பாராத விதமாக அவரது பாதுகாப்பு வாகனம் 60 வயது பெண் ஒருவர் மீது மோதியது.
விபத்தால் காயமடைந்த அப்பெண்மணி உடனடியாக சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
மருத்துவமனையில் காயமடைந்த அப்பெண்ணை நேரில் கண்டு நலம் விசாரித்த சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், அப்பெண்ணின் சிகிச்சைக்குத் தேவையான பண உதவிகளைச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications