குடிக்காதே என்று கண்டித்த மனைவி... எரித்துக்கொன்ற கணவன் - சென்னையில் பயங்கரம்
குடிப்பதை கண்டித்த மனைவியை தீ வைத்து எரித்துக்கொலை செய்த கணவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை: மேடவாக்கம் அருகே குடிப்பதை கண்டித்த மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்றுள்ளான் குடிகார கணவன். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேடவாக்கம் ராம்தாஸ் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குடிபோதையில் தகராறு
போதைக்கு அடிமையான ராஜேஸ் வேலைக்குச் செல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார்.
இதனால் ராஜேஷ்க்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் இடையே அடிகடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கணவன் மனைவி சண்டை
இந்நிலையில் நேற்று இரவும் அவர்களுக்குள் சண்டை வரவே, கோபப்பட்ட சந்தியா கணவர் ராஜேஷிடம் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் கணவர் ராஜேஷ் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு
சண்டை முற்றவே கணவர் ராஜேஷ் மனைவியை சந்தியாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும் கடும் கோபத்தில் இருந்த ராஜேஷ், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சந்தியா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில், சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை
மனைவி மீது தீ வைத்தபோது, ராஜேஷ் மீதும் தீப்பற்றவே படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு காயமடைந்த அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications