அதிமுக மேடைப் பேச்சாளரின் மகளை ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக வாலிபர் மீது புகார்
தூத்துக்குடி: திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பலமுறை திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்குக் கூட்டிச் சென்று உறவு கொண்டு ஏமாற்றி விட்டதாக, அதிமுக மேடைப் பேச்சாளரின் மகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார்.
காயல்பட்டணம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இளம்பெண் மகராசி கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:

நான் மேற்கண்ட முகவரியில் எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனது தந்தை முருகன் அதிமுக மேடை பேச்சாளராக இருந்து வருகிறார். எங்கள் பகுதியிலுள்ள தனியார் கேபிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காயல்பட்டணத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவருடைய மகனான வெற்றிவேலும் நானும் கடந்த 3வருடங்களாக காதலித்து வந்தோம்.
வெற்றிவேல் திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு என்னை அழைத்து சென்றுள்ளார். இதனால் நான் கர்ப்பிணியானேன். 5 மாத கர்ப்பிணியான நான் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெற்றிவேலிடம் வலியுறுத்தினேன். இதனைக்கேட்ட வெற்றிவேல் எனது சகோதரிக்கு திருமணம் ஆனவுடன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி கூறினார்.
அத்துடன் என்னை கடந்த மாதம் மார்த்தாண்டம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று என் கர்ப்பத்தையும் கலைத்து விட்டார். அதன்பின்னர் வெற்றிவேல் என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து நான் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
இருந்தபோதும் காயல்பட்டணத்திலுள்ள வெற்றிவேலின் நண்பரான பா.ஜ.க பிரமுகரால் வெற்றிவேல் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த என்னை அந்த பிரமுகர் மிரட்டியும் வருகிறார்.
எனவே அந்த பிரமுகர் மீதும், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை ஏமாற்றிய வெற்றிவேல் மீதும் தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications