ஒரு கோழிக்காக சண்டை.. பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த குடிகாரன் கைது!
திருச்செந்தூர்: ஒரு கோழிக்காக நடந்த சண்டையில் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்சந்தூர் அருகே உள் கரம்பவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயா (40). திங்கள்கிழமை இரவு இவர் கொடூரமாக கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரரான 52 வயது பாண்டியைக் கைது செய்தனர்.
ஜெயா தனது வீட்டில் கோழி வளர்த்து வந்தார். அதில் ஒரு கோழியை பாண்டி திருடி விட்டதாக தெரிகிறது. இதையறிந்து ஜெயா அவருடன் சண்டைக்குப் போயுள்ளார். அப்போது நல்ல குடிபோதையில் இருந்த பாண்டி, ஆத்திரத்தில் ஜெயாவை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு ஓடி விட்டார்.
தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாண்டியை போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications