சென்னையில் ஆட்டோ, குடிசைக்கு தீ வைத்த பெண் போலீஸ்...- புதிய வீடியோ ஆதாரம் சிக்கியது

சென்னை கலவரத்தின் போது ஆட்டோ, குடிசைக்கு தீ வைத்தது பெண் போலீஸ் என்பதற்கான புதிய வீடியோ ஆதராம் சிக்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று மிகப்பெரிய அளவில் கலவரம் நடைபெற்றது. வன்முறை வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் காயமடைந்தனர். 250 வாகனங்கள் சேதமடைந்தன.

காவல்துறை வாகனங்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் வாகனங்களும் தீக்கிறையாக்கப்பட்டன. ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம், நடுக்குப்பம் மீன் மார்க்கெட், மயிலாப்பூர் போலீஸ் பூத் ஆகியவையும் தீ வைக்கப்பட்டன.

Woman Police fire auto in chennai shocking video

சமூக விரோதிகள் கல்வீசினார்கள் போலீசார் தடியடி நடத்தினார்கள் என்று காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ளார். இதனிடையே ஆட்டோ, குடிசைக்கு காவல்துறையினரே தீ வைத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் ஊடகங்களில் வெளியானது.

தீ வைத்த பெண் போலீஸ்

இது மார்பிங் செய்யப்பட்டது என்று காவல்துறை ஆணையர் ஜார்ஜ், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் கூறினாலும் தற்போது புதிய வீடியோ ஒன்று சிக்கியுள்ளது. இதில் பெண் போலீஸ் ஒருவர் ஆட்டோவிற்கு தீ வைக்கும் காட்சி தெளிவாக வெளியாகியுள்ளளது. இது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரிசையாக தீ வைப்பு

கவச உடை அணிந்து முகத்தை கர்ச்சிப்பினால் கட்டிக்கொண்டு பெண் போலீஸ் ஒருவர் வரிசையாக தீ வைத்துக்கொண்டு செல்கிறார். குப்பை தொட்டியை கூட விட்டு வைக்காமல் தீ வைக்கிறார் பெண் போலீஸ் ஒருவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+