கள்ளக்காதல் விபரீதம்.. மனைவி தற்கொலை.. கணவருடன் பழகிய பெண் போலீஸ் அதிரடி சஸ்பெண்ட்
கடலூர் அருகே பெண் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, அந்த பெண்ணின் கணவருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாக பெண் போலீஸ் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர்: கடலூரில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாக பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயங்கொண்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவருடன் கள்ளக்காதலில் மூழ்கி அவருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட பெண் காவலர் ராதிகா சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில், அதேதோனியில் மேலும் ஒரு சம்பவம் கடலூர் அருகே நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி. செல்வக்குமாருக்கும், தலைமைப் பெண் காவலர் ஒருவருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராஜலட்சுமி கணவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கணவரின் நடத்தை பிடிக்காததால் ராஜலட்சுமி கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராஜலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட காவல்துறை எஸ்.பி. விஜயகுமாரிடம் ராஜலட்சுமியின் உறவினர்கள் புகார் அளித்தனர். இதனிடையே தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில், கணவர் செல்வக்குமாருக்கும், பெண் காவலர் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக மாவட்ட காவல் எஸ்.பி. விஜயகுமார் நடத்திய விசாரணையில் செல்வக்குமாருக்கும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவின் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் மணிமொழி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மணிமொழியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications