முகத்தை மூடி, பூரிக்கட்டையால் அடித்து, அரிவாளால் வெட்டி.. என்னா ஒரு வெறி இந்த மனைவிக்கு!
தாராபுரம்: தாராபுரத்தில் குடித்து விட்டு சண்டை போட்டு வந்த கணவரை, ‘ஆசை' பட ஸ்டைலில் கொலை செய்ய மனைவி முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம்ரோடு காந்திபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (35) ஜே.சி.பி. ஆபரேட்டர். இவரது மனைவி வஞ்சியம்மாள் (30), மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நந்தினி, வாணி என 2 மகள்கள் உள்ளனர்.

கண்ணனுக்கு தன் மனைவி வேலைக்குப் போவதில் விருப்பமில்லை. வீட்டில் இருந்தபடி தனது குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுமாறு அவர் கூறி வந்துள்ளார். ஆனால், அதனை வஞ்சியம்மாள் ஏற்கவில்லை. இதனால், இருவருக்குள்ளும் மனஸ்தாபம் இருந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த கண்ணன், இது தொடர்பாக மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் அப்படியே தூங்கி விட்டார். ஆனால், கணவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த மனைவி வஞ்சியம்மாள், அவரைக் கொல்ல திட்டமிட்டார்.
அதன்படி, நள்ளிரவில் எழுந்த வஞ்சியம்மாள், பிரகாஷ் ராஜ் நடித்த ஆசை படத்தில் வரும் காட்சியை போல, கணவரின் கை, கால்களை கட்டினார். பின்னர் கண்ணனின் தலைப்பகுதி முழுவதையும் பிளாஸ்டிக் கவர் போட்டு மூடினார். திடீரென மூச்சுத் திணறல் ஏற்படவே திடுக்கிட்டு எழுந்தார் கண்ணன்.
இதைப் பார்த்த வஞ்சியம்மாள், தயாராக வைத்திருந்த பூரிக்கட்டையால் கண்ணனின் முகத்தில் பலமாகத் தாக்கினார். ஆனால் பூரிக்கட்டை இரண்டாக உடைந்தது. இதை எதிர்பாராத அவர் ஆத்திரம் தீராமல் வீட்டில் இருந்த அரிவாளால் கணவனை வெட்டியுள்ளார். கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே, வஞ்சியம்மாள் போலீசில் சரண் அடைந்தார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘குடித்து விட்டு வந்து தினமும் தொல்லை கொடுத்ததால் அரிவாளால் வெட்டியதாக' தெரிவித்துள்ளார். இதையடுத்து வஞ்சியம்மாளை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications