சென்னை ஓட்டேரியில் பரிதாபம்.. வீட்டில் தேங்கிய மழை நீரில் வழுக்கி விழுந்து பெண் பலி
மழை நீரில் வழுக்கி விழுந்து பெண் பலியானார். ஓட்டேரியில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னை : ஓட்டேரியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் வழுக்கி கீழே விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தாயை இழந்த சோகத்தில் நான்கு பிள்ளைகள் தவித்து வருகின்றனர்.
சென்னையில் வடகிழக்குப் பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழையால், பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சென்னை ஓட்டேரி சுப்பராயன் 4 வது தெருவிலும் அதிகளவில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

இந்நிலையில் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அப்பளத் தொழிலாளி மருதமுத்து என்பவரின் வீட்டிலும் மழைநீர் புகுந்துள்ளது. மருதமுத்து அவரது மனைவி பவுனாம்பாள் மற்றும் நான்கு குழந்தைகள் வேறு வழி இல்லாமல் தண்ணீர் வடியும் என்று வீட்டிலேயே இருந்துள்ளனர்.
இந்நிலையில் தேங்கியிருந்த மழைநீரில் வழுக்கி கீழே விழுந்த அவர் மனைவி பவுனாம்பாள் என்பவர் பின்னந்தலையில் பலத்த அடிப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில், அவரது குடும்பத்தினர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பவுனாம்பாள் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக ஓட்டேரி காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இறந்த பவுனாம்பாளுக்கு 2 பெண் குழந்தைகளும் 2 மகன்களும் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications