சகோதரன் போல கண்ணியம் காக்கிறார்கள்.. ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் பெண்களை உருக வைத்த தமிழ் காளைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளதற்கு காரணம், அதில் தன்னெழுச்சியாக பெண்களும் பங்கேற்றதுதான்.

அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது, உடனே வீட்டை விட்டு வெளியே வந்து எங்களையும், கைது செய்யுங்கள் என வீதியில் அமர்ந்தனர் பெண்கள். வேறு வழியின்றி இளைஞர்களை விடுதலை செய்தது அரசு.

சென்னை மெரினா, மதுரை தமுக்கம், கோவை வ.ஊ.சி மைதானம், அலங்காநல்லூர் என எங்கு பார்த்தாலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் களத்தில் உள்ளனர்.

இளம் பெண்களும் வீட்டை விட்டு வெளியேறி பொது இடத்தில் தங்கியுள்ளனர். இதற்கு அவர்களது வீடுகளில் ஆதரவு கொடுத்துள்ளனர். பெண்கள் மாண்புக்கு சக போராட்ட களத்திலுள்ள ஆண்களால் இம்மியளவுக்கும் மாசு ஏற்படவில்லை என்பதே இதற்கு காரணம்.

பஸ்சில் செல்லும்போது கிண்டல் செய்கிறார்கள், நடந்து செல்லும்போது தெரு ஓரத்தில் நின்று கேலி செய்கிறார்கள் என்று தமிழக இளைஞர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை, குறிக்கோளை நோக்கி பாயும் தோட்டாக்களாக அவர்கள் மாறியபோது, துடைத்து தூர எறிந்துவிட்டனர்.

தெருவிலேயே பெண்கள் பாதுகாப்பாக படுத்து தூங்கி எழும் காலத்தை இளைஞர்கள் மலரச் செய்துள்ளனர். டிவிட்டரில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த படம் அதற்கு ஒரு சான்று.

என்.டி.டி.வி ஆசிரியர் குழு இயக்குநரும், நெறியாளருமான சோனியா சிங் வெளியிட்டுள்ள டிவிட்டில், "மெரினா கடற்கரையில் இளம் பெண்கள் சீண்டல் பயமின்றி ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வருவது பெரிய விஷயம். டெல்லி பாடம் கற்க வேண்டும்" என கூறியுள்ளார்.

கோவை, வ.ஊ.சி மைதானத்தில் இருந்தபடி டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வேட்டி, சட்டை அணிந்த இளம் பெண் "தமிழர்களை ஒருவர் பொறுக்கி என அழைத்து வருகிறார்கள். அவரது வீட்டு பெண்களை இந்த பொறுக்கிகள் கூட்டத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும். அந்த பெண்கள் எப்படி கண்ணியத்தோடு நடத்தப்படுகிறார்கள் என்பதை பார்ததுவிட்டு தமிழக இளைஞர்கள் பொறுக்கிகளா, இல்லையா என்பதை அவர் தீர்மானிக்கட்டும். நான் போராட்ட களத்தில் வேட்டி, சட்டையோடு பங்கேற்றுள்ளேன். என்மீது எந்த ஒரு இளைஞர் பார்வையோ, கையோ தவறுதலான நோக்கத்தில் பட்டதேயில்லை. எனது கூடப்பிறந்த சகோதரர்கள் கூட இவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை" என்றார்.
இதுதாங்க தமிழினம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+