நம்மவர்கள் போஸ்டர்கள், பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்கவும்: கமல் ஹாஸன் கறார்
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று மாலை சென்னையில் நடக்கும் மகளிர் தின விழாவிற்கு யாரும் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கக் கூடாது என்று கமல் ஹாஸன் அறிவித்துள்ளார்.
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் உயர் நிலை குழு உறுப்பினர்களான நடிகை ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் மகளிர் தின விழாவிற்கு அனைவரும் வருக. மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, நம்மவர்கள் போஸ்டர்கள்,பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்கவும்!. #MNMforWomen #பெண்களைப்போற்றுவோம்
— Kamal Haasan (@ikamalhaasan) March 8, 2018
இந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இன்று மாலை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் மகளிர் தின விழாவிற்கு அனைவரும் வருக. மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, நம்மவர்கள் போஸ்டர்கள், பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்கவும்!. #MNMforWomen #பெண்களைப் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications