மதுக் கடைகளை மூடக் கோரி கண்களைக் கட்டிக் கொண்டு பெண்கள் போராட்டம்!
சென்னை: தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கை அமல்பபடுத்தக் கோரி சென்னையில் இன்று பெண்கள் சங்கத்தினர் நடத்திய நூதனப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மதுக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. தெருவில், சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. குடிகார்ரகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.சாலையில் ஆங்காங்கே யாராவது குடிகாரர்கள் விழுந்து கிடப்பது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மது விலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மதுக் கடைகளை இழுத்த மூட வேண்டும் என்று மதிமுக, பாமக ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. போராடியும் வருகின்றன. பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராடியவண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பின் சார்பில் பெண்கள் கலந்து கொண்ட போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள், கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு முழுமையான மது விலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

சசி பெருமாள் தனி மனிதராக ஆர்ப்பாட்டம்
அதேபோல காந்தியவாதி சசி பெருமாள் இன்று சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரே மது விலக்கை அமல்படுத்தக் கோரி தனி மனிதராக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். ஆனால் அவரைப் போலீஸார் சமரசப்படுத்தி பேசி அங்கிருந்து போகச் செய்தனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications