ஓட்டுக்கு ஏன் பணம் தரலை.. திமுக வேட்பாளரின் வீட்டுக்கே சென்ற பெண்கள்.. நெல்லையில் சம்பவம்
திருப்பூர்: ஓட்டுக்கு ஏன் பணம் தரவில்லை என்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளரின் வீட்டுக்கே பெண்கள் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் திருப்பூரில் டோக்கனுக்கு தந்தா மட்டும் போதுமா? பணம் எங்கே? என்று பெண்கள் திமுகவினரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
தழிக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக பரபரப்பான புகார்கள் கிளம்பி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் உலா வருகின்றனர்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் தான். ஆனால் பல வேட்பாளர்களும் பணம் கொடுத்து வாக்காளர்களின் வாக்குகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 வரை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அந்த வகையில் தான் இன்று திருநெல்வேலியில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏவாக அப்துல் வஹாப் இருக்கிறார். இவர் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் ஏராளமான பெண்கள் இன்று காலையில் திடீரென்று அவரது வீட்டுக்கே சென்று ஓட்டுக்கு பணம் கேட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகராட்சியின் 7 வது வார்டு பகுதியில் சிலருக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் தங்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறி அவர்கள் அப்துல் வஹாப் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட செல்லம் நகர், சிவகசக்தி நகர் 2வது வீதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்யும் வகையில் டோக்கன் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் நாளை நடக்கும் நிலையில் இன்னும் அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லையாம். இதனால் கோபமான பெண்கள் டோக்கன் வந்துவிட்டது? பணம் எங்கே? என்று திமுகவினரிடம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் திண்டுக்கல்லில 17வது வார்டில் சிலருக்கு திமுக சார்பில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னொரு தரப்பு மக்களுக்கு பணம் கொடுக்கவில்லையாம். இதனால் அந்த மக்கள் அங்கிருந்தவர்களிடம் போய் ஓட்டுக்கு பணம் கேட்டுள்ளனர். அப்போது அங்கு இருந்தவர்கள் கணக்கு முடிந்துவிட்டது. இனி பணப்பட்டுவாடா கிடையாது என்று கூறியுள்ளனர். இதனால் கோபமானவர்கள் அங்குள்ள திமுக கவுன்சிலரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications