இன்று உலக மீனவர்கள் தினம்: கடல் அன்னைக்கு மரியாதை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: உலகமீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செய்தனர். பாஜக மீனவர்கள் அணி சார்பில் மீன் உணவுக் கண்காட்சியும் நடைபெற்றது.

கடலைநம்பி வாழ்க்கை நடத்தும் மீனவமக்கள் ஆண்டுத்தோறும் நவம்பர் 21 ம்தேதியை மீனவர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

உலகில் பறந்து விரிந்து கிடக்கும் கடலை நம்பி பல இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.கடலில் இருந்து மனிதனுக்கு தேவையான உணவு பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை கிடைத்துவருகின்றன.

World Fishermen's Day celebrated to Fishermen

நெல்லை,தூத்துக்குடி,கன்னியாக்குமரி மாவட்டங்களில் வசிக்கும் பல லட்சம் மீனவர்கள் வசித்து வருகின்றனர்.இன்று உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் குடும்பத்தினர் இன்று தமிழக கேரளா எல்லை யும் கன்னியாகுமரி மாவட்ட பகுதியுமான கடற்கரை கிராமங்களில் கடல் அன்னைக்கு மரியாதை செய்யும் வண்ணம் கடலில் மலர் தூவி,அங்குள்ள ஆலயங்களில் முக்கியவழிபாடுகளை நடத்தினர்.

மீனவர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்சிகளும் கடற்கரை கிராமங்களில் நடத்தப்பட்டன. பாரதீய ஜனதாக் கட்சி மீனவர்கள் அணியின் சார்பில் சென்னையில் மீன் உணவு கண்காட்சியும் நடத்தப் பட்டன.

இந்த கண்காட்சியினை மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பார்வையிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+