For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாவ் காயின் பெயரில் ரூ.18 லட்சம் மோசடி... 3 பேர் மீது சென்னை போலீஸ் வழக்கு

வாவ் காயின் பெயரில் ரூ.18 லட்சம் மோசடி செய்துள்ளதை அடுத்து 3 பேர் மீது சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: வாவ் காயின் பெயரில் ரூ. 18 லட்சம் மோசடி செய்துள்ளதை அடுத்து 3 பேர் மீது சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு வாவ் காயின் நிறுவனம் செயல்படுகிறது. இது இணையதளம் மூலம் பயன்படுத்தப்படும் பணம் ஆகும். இந்த திட்டத்தில் சட்டவிரோதமான கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுகிறது. வருமான வரித்துறையினருக்கு தெரியாமல் இருக்க ஆன்லைனில் முதலீடு செய்யப்படுகிறது.

Wow Coin scandal: Chennai Police files case against 3 members

வாவ் காயின் திட்டத்தில் பணம் முதலீடு செய்தால் பலமடங்கு பெருகும் என்று சென்னையில் சிலர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி சென்னை இந்திராணி உள்ளிட்டோர் ரூ.18 லட்சம் வரை முதலீடு செய்தனர்.

இந்நிலையில் வாவ் காயின் ஏஜென்ட்கள் வாங்கிய பணத்தையும் தராமல் இழுத்தடிப்பதால் சந்தேகம் அடைந்த சென்னை இந்திராணி அண்ணா நகர் போலீஸில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் வாகூறி மோசடி செய்யப்பட்டுள்ளது. பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிலின் ஜோசப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 5000 பேர் முதலீடு செய்து ஏமாற்றமடைந்துள்ளனர்.

English summary
Rs. 18 lakhs Wow Coin Scandal: Chennai Annanagar Police files case against 3 members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X