ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் சரோஜாவின் சொத்து மதிப்பு ரூ.2.29 கோடி
சேலம்: ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரோஜாவின் சொத்து மதிப்பு ரூ.2.29 கோடி ஆகும்.
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரோஜா நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து மதிப்பு விவரங்களையும் தாக்கல் செய்தார்.
சரோஜாவின் பெயரில் வங்கியில் ரூ.20 லட்சத்து 26 ஆயிரத்து 63ம், மரணம் அடைந்த அவரது கணவர் பெருமாள் பெயரில் ரூ. 33 லட்சத்து 67 ஆயிரத்து 236ம் உள்ளது.

மேலும் அவரது நான்கு மகன்கள் பெயரில் வங்கியில் உள்ள பணத்தின் விவரம் வருமாறு,
ராஜேஷ் கண்ணா - 12 லட்சத்து 22 ஆயிரத்து 36 ரூபாய்
சுரேஷ் கண்ணா - 6 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்
சதீஷ் - 11 லட்சத்து 85 ஆயிரத்து 992 ரூபாய்
கார்த்திக் - 20 லட்சத்து 39 ஆயிரத்து 583 ரூபாய்
சரோஜாவின் பெயரில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள நிலம், அவரது கணவர் பெயரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடு, ராஜேஷ் கண்ணா பெயரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிலம் ஆகியவை உள்ளன. இவை அனைத்தையும் சேர்த்தால் ரூ.1 கோடியே 4 லட்சத்திற்கு அசையும் சொத்தும், விவசாய நிலம் உள்பட ரூ.1 கோடியே 25 லட்சத்திற்கு அசையா சொத்துக்களும் உள்ளன என்று சரோஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் சரோஜாவின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 29 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications