வளர்ப்பு நாய்க்கு 'கேப்டன்' பெயர் சூட்டி அழைப்பது யார் தெரியுமா? படிங்க.. பயங்கரமா அதிர்ந்துடுவீங்க
சென்னை: தமிழக அரசியலில் 'கேப்டன்' என மரியாதையுட்டன் அழைக்கப்படுகிறவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்... ஆனால் வளர்ப்பு நாய்க்கு 'கேப்டன்' என பெயர் சூட்டி ஒருவர் அழைத்துக் கொண்டிருக்கும் அதிர வைக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார் மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார்.
சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவை விட்டு வெளியேறிய சந்திரகுமார், மேட்டூர் பார்த்திபன் உள்ளிட்டோர் மக்கள் தேமுதிகவை உருவாக்கினர். திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட சந்திரகுமார், பார்த்திபன், சேகர் மூவரும் தோல்வியடைந்தனர்.
இந்த நிலையில் மக்கள் தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்த பின்னர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேப்டன் போய் விஜயகாந்த்
கேப்டன் என்று பாசத்தோடு அழைத்த நாங்கள் இன்று விஜயகாந்த் என்று பெயர் சொல்லி கூப்பிடுகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த செய்தி உங்களுக்குத் தெரியாது...எங்கள் மனதிலே இருக்கிற வருத்தமான விஷயத்தை உங்களிடத்தில் பதிவு செய்ய வெண்டும்... இது தமிழக மக்களுக்குத் தெரிய வேண்டும்.

நாய் வளர்க்கும் பிரபாகரன்
கேப்டன் அவர்களுடைய மகன் பிரபாகரன் அவர்கள் நாய் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நாய் கண்காட்சிக்கு இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் போய்வந்து கொண்டிருக்கிறார். அதில் எங்களுக்கு கவலை இல்லை.

ரூ6 லட்சம் மதிப்பிலான நாய்...
இதிலே மிகவும் கொடுமையான ஒருவிஷயம் என்னவென்று சொன்னால்... கடவுளைப் போல, ஒரு மனித தெய்வத்தைப் போல எங்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்...
இன்று மத்திய பிரதேசத்தில் இருந்து ரூ5 அல்லது ரூ6 லட்சம் மதிப்பில் கேப்டனின் மகன் விஜயபிரபாகரன் நாய் ஒன்றை வாங்கி வந்திருக்கிறார்.

வளர்ப்பு நாய்க்கு "கேப்டன்" என பெயர்
அந்த வளர்ப்பு நாய்க்கு கேப்டன் என்று பெயரைச் சூட்டி, ஒரு நாயை கேப்டன் என்று அவரது வீட்டுக்குள்ளேயே கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பிறகும் விஜயகாந்த் அவர்களை கேப்டன் என்று கூப்பிடுவதற்கு எங்களுக்கு மனம் வரவில்லை. அதனால்தான் அவரை விஜயகாந்த் என சொல்கிறோம்.

கேப்டனும் நாயும் ஒன்றா?
இதைவிட கேவலமான, மோசமான நிலை விஜயகாந்த் அவர்களுக்கு இனி வரப்போவதும் இல்லை...வரவேண்டிய அவசியமும் இல்லை... இதைவிட வேறு என்ன வேண்டும்? ஒருநாய்க்கு போய் தன்னுடைய பிள்ளை கேப்டன் என பெயரை வைத்து அழைக்கிறார் எனில் அப்ப கேப்டனும் நாயும் ஒன்றா? என்ற கேள்வி என் மனதிலே எழுகிறது.

தேமுதிகவே இருக்காது
தன்னுடைய வீட்டிலே இருப்பவர்களைக் கூட தன்னுடைய கட்டுப்பாட்டிலே வைத்திருக்க முடியாதவர்; தேமுதிகவை தன்னுடைய கட்டுப்பாட்டிலே வைத்திருக்கிறார் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்? அடுத்த சட்டசபை தேர்தல் நடைபெறுகிற போது தேமுதிக என்ற இயக்கமே தமிழகத்தில் இருக்காது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
இவ்வாறு சந்திரகுமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications