ஒருதலைக் காதலால் இளம்பெண் கொலை – சென்னையில் விபரீதம்
சென்னை: ஒரு தலைக் காதலால் சென்னையில் பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போரூர் ஏரியில் நேற்று முன்தினம் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட ஒரு பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றினார்கள்.
கை, கால்களை தனியாக துண்டித்தும், உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டியும் ஏரியில் வீசி இருந்தனர்.
கொடூர கொலை:
மிக கொடூரமாக கொலையுண்ட அந்த பெண் யார் என்றும் கொலையாளிகள் யார் என்பது பற்றியும் போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து துப்பு துலக்கினர்கள்.
காணமல் போனவர்:
காணாமல் போன பெண்களின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர். அப்போது சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகர் 10 ஆவது தெருவை சேர்ந்த ரேகா என்ற பெண் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
கதறிய கணவர்:
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் ஸ்ரீராம் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று உடலை காட்டினார்கள். அதைப் பார்த்ததும் ஸ்ரீராம் கதறி அழுதார். கொலை செய்யப்பட்டிருப்பது மனைவி ரேகா தான் என்று உறுதிப்படுத்தினார்.
புதுமணப் பெண்:
ரேகாவுக்கும், ஸ்ரீராமுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. ஸ்ரீராம் அம்பத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடத்தி கொலை:
ரேகா எம்.ஜி.ஆர் நகரில் ஜிம்மில் பணிபுரிந்து வந்தார். கடந்த 1 ஆம் தேதி காலையில் ஜிம்முக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை யாரோ கடத்தி கொலை செய்து இருக்கிறார்கள்.
ஒருதலைக் காதல்:
போலீசார் விசாரணையில் மாதவரத்தை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் சாம்சன், ரேகாவை ஒரு தலையாக காதலித்தது தெரிய வந்துள்ளது.ஒரு ஆண்டுக்கு முன்பு ரேகா கிண்டியில் ஒரு கால்சென்டரில் வேலை பார்த்தார். அப்போது டிரைவர் சாம்சன் அந்த நிறுவனத்துக்கு கார் ஓட்டி இருக்கிறார்.
மறுத்த ரேகா:
அடிக்கடி ரேகாவை பின் தொடர்ந்த சாம்சன் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் ரேகா ஸ்ரீராமை காதலித்து வரும் விஷயத்தை கூறி தன் மீது ஆசைப்பட வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.
காதல் தொல்லை:
ஆனால் சாம்சனால் ரேகாவை மறக்க முடியவில்லை. அடிக்கடி ரேகாவை பின் தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி ரேகா தனது காதலர் ஸ்ரீராமிடம் தெரிவித்து இருக்கிறார்.
வேலையை விட்ட ரேகா:
சாம்சனின் தொந்தரவு பொறுக்க முடியாமல் ரேகா கால்சென்டருக்கு வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் ரேகா - ஸ்ரீராம் காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பிறகும் சாம்சன் ரேகாவை பின் தொடர்ந்துள்ளார்.
ஆத்திரத்தில் கொலை:
ரேகா இன்னொருவருக்கு மனைவியாகி விட்டதால் தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்தில் சாம்சன் கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தலைமறைவு:
சாம்சன் வீட்டுக்கு போலீசார் சென்ற போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர் தலைமறைவாகி விட்டார். செல்போனும் "சுவிட்ச்" ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications