கொள்ளிடம் ஆற்றில் பெண் கொன்று புதைப்பு.. எலும்பு துண்டுகளை நாய்கள் குதறியதால் அம்பலம்
ஆற்றுமணலில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவையாறு: திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்று மணலில் இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் தென்கரையிலிருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அருகில் சென்று பார்த்தனர். அப்போது சில நாய்கள் குழி தோண்டி எலும்பு துண்டுகளை கவ்வி சென்று கொண்டிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து மரூர் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அங்கு நாய்கள் கடித்து குதறிய நிலையில் கிடந்த ஒரு பெண்ணின் சடலம் மண்ணில் கிடந்ததுடன், பெண்ணின் கை, கால் போன்றவற்றின் எலும்புகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.
அவற்றினை மீட்டு பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், பெண் அணிந்திருந்த புடவை, கைக்கடிகாரம் போன்றவற்றையும் போலீசார் மீட்டனர். கைக்கடிகாரம் இயங்கி கொண்டிருந்ததால் இச்சம்பவம் நடைபெற்று சில வாரங்களே ஆகியிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
புதைக்கப்பட்ட இடத்தில் மதுபாட்டில்கள் மற்றும் கத்தி இருந்ததால், அப்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications