நள்ளிரவு பைக் ரேஸ் விட்டதில் விபரீதம் – விபத்தில் சிக்கி 20 வயது இளைஞர் பலி
சென்னை: சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 20 வயது இளைஞர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த 20 வயதான அரவிந்த் என்பவர், தனது நண்பர்களுடன் கடற்கரை சாலையில் இருந்து பைக் ரேஸ் கிளம்பியுள்ளார். அரவிந்த் வாகனத்தில் மொத்தம் 3 பேர் இருந்துள்ளனர்.
ரேஸில் பங்கேற்ற இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் வந்துகொண்டிருந்தன.

அப்போது அருகே இருந்த தெரு வழியாக பிரதான சாலைக்கு நுழைந்த சைக்கிள் ரிக்சா மீது அரவிந்த் ஒட்டிவந்த பைக் இடித்து, அருகில் இருந்த தொலைபேசி இணைப்பு பெட்டி மீது மோதி சிதைந்தது.
இந்த விபத்தில் பைக்கில் அமர்ந்திருந்த அரவிந்த்தும், இரண்டாவதாக அமர்ந்திருந்தவரும் படுகாயம் அடைந்தனர். மூன்றாவதாக அமர்ந்திருந்தவரும், சைக்கிள் ரிக்சா ஓட்டி வந்தவரும் லேசான காயம் அடைந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த அரவிந்த், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications