பாம்பு பிடிப்பதில் “எக்ஸ்பர்ட்” கல்லூரி மாணவன் ராஜநாகம் கடித்து உயிரிழப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாம்புகளை உயிருடன் பிடித்து காட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வரும் பணியை மேற்கொண்டு வந்த கல்லூரி மாணவர் ஒருவர் பாம்பு கடித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் கிழக்கு கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கார்த்திகாயினி. மூத்த மகள் மோகனா ராகவி, பல் மருத்துவர். இளைய மகன் நவீன்குமார் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்தார்.
நவீன்குமாருக்கு பாம்புகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். யாராவது வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டது எனக் கூப்பிட்டால் அடுத்த நிமிடமே அங்கு போய் பாம்பை பிடித்து வந்து உணவூட்டி டப்பாவில் அடைத்து மறுநாள் பாதுகாப்பாக சிறுமலைக் காட்டில் கொண்டு போய் விடுவார்.
விடுமுறை நாட்களில், பாம்பு களை தேடிப்போய் பிடித்து வந்து அவற்றை கழுத்தில் போட்டு சக மாணவர்களிடம் ஹீரோ போல காட்டிக் கொள்வாராம்.
10 வயதில் குளத்தில் குளிக்கச் சென்ற இடத்தில் தண்ணீர் பாம்புகளை பிடித்தவர், தொடர்ந்து மற்ற பாம்புகளையும் பிடிக்க பழகினார். இதற்காக எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நவீனுக்கு ராஜநாக்தினைப் பிடிக்க வேண்டும் என்று ரொம்ப நாளக ஆசை. அதேபோல, சில நாள்களுக்கு முன், இவரது வீட்டுக்கு அருகே காமாட்சிபுரத்தில் ராஜநாகத்தை பிடித்துள்ளார். அதன் வாயில் முத்தம் கொடுத்தபோது பாம்பு உதட்டில் கொத்தியது.
இதில் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் இறந்தார்.
இதுகுறித்து தெரிவித்த மாவட்ட வன அலுவலர் வெங்க டேஷ், " பாம்புகளில் அதிக விஷம் கொண்டது ராஜநாகம்தான். இந்த பாம்பு வனப்பகுதியில் மட்டுமே வசிக்கும். வெளியே வருவதே அபூர்வம். பாம்பை பிடிக்க அச்சம் கூடாது. கவட்டை கம்பு இருந்தால் போதும். கழுத்தைப் பிடித்தால் எந்தப் பாம்பும் கடிக்காது.
எல்லா பாம்புகளும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாது காக்கப்பட வேண்டிய உயிரினம்தான். அவற்றை வீட்டில் வைத்திருக்கக் கூடாது" என்றார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications