காதலிக்க மறுத்த பேராசிரியைக்கு கத்திக்குத்து.. புத்தாண்டின்போது வாலிபரின் வெறிச்செயல்!
காதலிக்க மறுத்த பேராசிரியைக்கு கத்திக்குத்து.. புத்தாண்டின்போது வாலிபரின் வெறிச்செயல்!
நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி பேராசிரியை தேவாலயத்தின் வெளியே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த இளைஞரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி பிள்ளை என்பவரின் மகள் அனுகென்சி. இவர் நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரை நித்திரவிளை பூந்தோப்பு காலனியைச் சேர்ந்த மீன்பிடித் தொழில் செய்து வரும் பிஜூ காஸ்ரோ இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அனுகென்சி அவரை காதலிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் அவரை விடாமல் காஸ்ரோ தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது தொல்லை அதிகரிக்கவே அனுகென்சி 6 மாதங்களுக்கு முன்பு அங்குள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரை விசாரரித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் அடங்காத பிஜூ காஸ்ரோ தன்னை கென்சி கண்டிப்பாக காதலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அனுகென்சிக்கு வேறொரு இளைஞருடன் வரும் 5 ஆம் தேதி திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். வரும் 5ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்தார் பிஜு. அனு கென்சியைக் கொல்லத் திட்டமிட்டார். நேற்று இரவு புத்தாண்டையொட்டி நள்ளிரவு பிரார்த்தனைக்காக சர்ச்சுக்கு வந்திருந்தார் அனு கென்சி. சர்ச்சுக்கு வெளியே பிஜூவும் காத்திருந்தார். பிரார்த்தனை முடிந்து கென்சி வெளியே வந்தபோது, மறைந்திருந்த காஸ்ரோ அவரை சரிமாரியாக கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அனுகென்சி சரிந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் காஸ்ரோவை விரட்டிச் சென்று பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அனு கென்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications