ஏன் மாமா என்னை ஏமாத்துன.. கையில் குளுக்கோஸ்.. மனசு நிறைய காதல்.. கண்ணீருடன் பென்னாடம் கனிமொழி!
காதலனுடன் திருமணம் செய்து வைக்க கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
Recommended Video

பெண்ணாடம்: காதலித்து ஏமாற்றியவரை தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி இளம் பெண் நடத்தி வந்த தர்ணா போராட்டம் 3-,வது நாளை எட்டியுள்ளது. இதில் அந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பெண்ணாடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சவுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி. எம்.ஏ.படித்துள்ள கனிமொழியின் வயது 31. கனிமொழியும், பெண்ணாடத்தில் செங்கல் சூளை நடத்தி வரும் ஜானகிராமன் என்பவரும் ஒருவரையொருவர் விரும்பியுள்ளனர்.

மாயமான ஜானகிராமன்
ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜானகிராமனிடம் கனிமொழி கேட்டார். அதற்கு அவர் சரியான பதில் சொல்லாமல் தட்டிக் கழித்தே வந்துள்ளார். பொறுத்து பொறுத்து பார்த்த கனிமொழி, இதுகுறித்து விருத்தாச்சலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணையை துவக்க இருந்த நிலையில், ஜானகிராமன் மாயமாகிவிட்டார்.

தர்ணாவில் கனிமொழி
இதனால் அதிர்ச்சி அடைந்தார் கனிமொழி. தான் வசிக்கும் பகுதியிலேயே ஜானகிராமன் வீடு உள்ளதால், அங்கே சென்று தர்ணாவில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஈடுபட்டார். தலைமறைவான ஜானகிராமன் வீட்டு முன்னாலேயே இளம்பெண் போராட்டம் நடத்தி வருவது அந்த பகுதியில் மிகவும் பரபரப்பானது.

பேசக்கூட மாட்டேன்
இதையடுத்து, நேற்று மாலை ஜானகிராமன் விருத்தாச்சலம் மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து போலீசார் ஜானகிராமனை கனிமொழியிடம் அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினர். அதற்கு ஜானகிராமன், திருமணம் செய்ய மாட்டேன், பேசவும் மாட்டேன் என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் போலீசார், பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்து தங்களுடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயங்கி விழுந்த கனிமொழி
இந்நிலையில், 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கனிமொழி இன்று காலை திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவர்களை அழைத்து வந்து பார்த்ததில், உடல் பலவீனமானதால் மயங்கி விழுந்ததாக தெரிவித்து குளுக்கோஸ் ஏற்றினர்.
எனினும் கனிமொழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications