மண்டை இரண்டாக பிளந்தது.. மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை..கள்ளக்காதலால் விபரீதம்

மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: கள்ளக்காதலனுடன் தவறான செயலில் ஈடுபட்டபோது தன்னை கணவர் பார்த்துவிட்டதால், அதிர்ச்சியடைந்த இளம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர், திருப்பூர் பி.என்ரோடு குருவாயூரப்பன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் குடியிருந்து வருவதுடன், அங்குள்ள பனியன் கம்பெனில் ஒன்றிலும் வேலை பார்த்து வருகிறார்.

 கள்ள தொடர்பு

கள்ள தொடர்பு

இவருக்கு பாண்டிச்செல்வி 22, என்பவருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. எனினும் பாண்டிசெல்விக்கு அசோக்குமார் என்பவருடன் தவறான தொடர்பு ஏற்பட்டு நீடித்து வந்துள்ளது.

 வீடு திரும்பிய அசோக்குமார்

வீடு திரும்பிய அசோக்குமார்

இந்நிலையில் நேற்று காலை பாண்டிச்செல்வி, தன் அக்காவை பார்க்க சங்ககிரி செல்வதால் இரவு வீடு திரும்ப மாட்டேன், காலையில்தான் வருவேன் என்று கூறினார். அதற்கு சம்மதித்துவிட்டு அசோக்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். வழக்கமாக வேலை முடித்து லேட்டாக வீடு திரும்பும் அசோக்குமார், நேற்று மாலை சீக்கிரமாகவே வீடு திரும்பினார்.

 போலீசில் ஒப்படைக்க முடிவு

போலீசில் ஒப்படைக்க முடிவு

அப்போது வீட்டிற்குள் பாண்டிச்செல்வி வேறு ஒரு இளைஞருடன் தவறான செயலில் ஈடுபட்டதை நேருக்கு நேராக பார்த்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அசோக்குமார், அந்த இளைஞரை கண்மூடித்தனமாக அடித்து, போலீசில் ஒப்படைக்க முயன்றார். அப்போது கணவனை தடுத்து நிறுத்திய பாண்டிச்செல்வி, போலீசில் ஒப்படைத்தால் மானம் போய்விடும் என மன்றாடினார். ஆனாலும் அசோக்குமார் அந்த இளைஞரை பிடித்து இழுத்துகொண்டு மாடியிலிருந்து இறங்கினார்.

 மண்டை இரண்டாக பிளந்தது

மண்டை இரண்டாக பிளந்தது

முறையற்று நடப்பதை கண்ணால் பார்த்துவிட்டதால் ஏற்கனவே அவமானம் அடைந்த பாண்டிச்செல்வி, போலீசுக்கு போனால் இன்னும் மானம் போய்விடும் என்பதால், தன்வீடு உள்ள 3-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். இதனால் அவரது மண்டை இரண்டாக உடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

 இளைஞருக்கு தர்மஅடி

இளைஞருக்கு தர்மஅடி

இதனால் பதறிப்போன அசோக்குமார் மனைவியிடம் ஓடிவந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அந்த இளைஞர் அங்கிருந்த தப்ப முயன்றார். ஆனால் அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 மறக்க முடியவில்லை

மறக்க முடியவில்லை

போலீசார் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பாண்டியராஜன் 22, என்பதும் தெரியவந்தது. மேலும் சிவகாசியில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் தான் வேலை பார்த்து வரும்போது பாண்டிச்செல்வியுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டதாகவும், திருமணமானாலும் பாண்டிச்செல்வியை மறக்க முடியாமல், போன் செய்தபோது, தன்னை திருப்பூருக்கு வரச்சொன்னதாகவும் அந்த இளைஞர் தெரிவித்தார். இதையடுத்து அந்த இளைஞரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+