ஆவடியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை : கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைப்பு
ஆவடியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஆவடி : சென்னையை அடுத்த ஆவடியில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுத்த ஆவடி,கோனம்பேடு பகுதியில் பல்சர் பாலு என்கிற கோபால் வசித்துவந்தார். இவர் போரூரில் உள்ள செல்போன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு பவித்ரா என்கிற பெண்ணுடன் திருமணமாகி, ஒரு மகள் இருக்கிறார். கோபாலுக்கும் பவித்ராவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற கோபால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், பாலுவின் செல்போனுக்கு பலமுறை அழைத்தும் பதில் அளிக்கவில்லை.
இதனிடையே ஆவடி அடுத்த பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகரில் இளைஞர் ஒருவர் வெட்டப்பட்டு நிலையில் சடலமாக கிடப்பதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கொலை செய்யப்பட்டது கோபால் என்பதை உறுதி செய்தனர். மேலும் கொலையாளிகள் திட்டமிட்டு கோபாலை அங்கு வரவைத்து மிளகாய் பொடி தூவி பின்பு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வரும் காவல்துறையினர் அவரது மனைவி பவித்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பவித்ரா தந்தை பழனி மற்றும் ரெடிப்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார், ஆறுமுகம் ஆகியோரையும் தேடி வருகின்றனர்.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications