For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைட்ரோகார்பன்.. போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு.. சென்னை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்!

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. அதையடுத்து இளைஞர்கள் நடிகர் லாரன்ஸ் தலைமையில் காவல்துறை கமிஷனர் அலுவலகத்தை முற்று

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த காவல்துறை இளைஞர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதையடுத்து, அவர்கள் நடிகர் லாரன்ஸ் தலைமையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கடந்த மூன்று வாரங்களாக போராட்டம் நடைபெற்றது. நேற்று, அப்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. வடகாடு பகுதியில் ஆறாவது நாளாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுவார்த்தையை நிராகரித்தனர்.

Youngsters protesting in front of Chennai police commissioner office

இந்நிலையில், சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கேட்டனர். ஆனால், அவர்கள் அனுமதி தர மறுத்துவிட்டனர். அதையடுத்து இன்று நடிகர் லாரன்ஸ் தலைமையில் இளைஞர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி, மெரினாவில் பல லட்சம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் அவர்களை போலீஸ் தடியடி நடத்தி, போராட்டத்தைக் கலைத்தது. அதை நினைவில்கொண்டு, இளைஞர்களுக்கு காவல்துறை அனுமதித் தரத் தயங்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Police department refused to give permission for youngsters to conduct protest against hydro carbon plan. So youngsters protesting in front of chennai police commissioner's office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X