ஆரணி அருகே வட மாநில இளைஞருக்கு அடி-உதை.. போலீசார் விசாரணை
குழந்தை கடத்த வந்ததாக கூறி பொதுமக்கள் இளைஞர் மீது தாக்குதல் நடத்தினர்
ஆரணி: ஆரணி அருகே குழந்தையை கடத்த வந்ததாக கூறி இளைஞர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
ஆரணி அடுத்துள்ள கிராமம் காமக்கூர். இன்று காலை வடமாநில இளைஞர் ஒருவர் கிராமத்தையே சுற்றி சுற்றி வந்துள்ளார். இதனை கவனித்த கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்படவே, அவரை அழைத்து யார், என்ன என்று விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

இதனால் அவர் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவராக இருக்ககூடும் என்றும், கிராமத்தில் குழந்தை ஏதேனும் கடத்த வந்திருக்கலாம் என்றும் என்று சந்தேகித்த மக்கள், அவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்கினர்.
தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரை மீட்க முயற்சித்தபோதும், பொதுமக்களில் ஒருசிலர் இளைஞரை சரமாரி தாக்கினர். இதனால் மிகவும் சிரமப்பட்டு பொதுமக்களிடமிருந்து இளைஞரை அழைத்து சென்ற போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications