காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெசன்ட் நகரில் போராட்டம்: இளைஞர்கள் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெசன்ட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.

இதனிடையே சென்னை மெரினாவுக்குள் புகுந்த மாணவர்கள் திடீரென காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் போராட்டம் நடத்தினர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து மெரினாவில் போலீஸார் பாதுகாப்பை வலுப்படுத்தினர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையினுள் நுழைந்தனர்.
அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி நுழைந்த அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் மெரினாவை கைப்பற்றுவோம் என்றும் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications