திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள்!
ஈரோடு: திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி வர்ணபுரத்தைச் சேர்ந்தவர் விஜயன் (31). திருமணம் ஆனவர். இவர் தனது அண்ணன் அருமை பெருமாள் கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடைக்கு வரும்போது அவருடன் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். அப்போது மாணவிக்கு அவர் திருமண ஆசை காட்டி பழகி வந்தார்.

இதனையடுத்து கடந்த 01.12.2014 அன்று மாணவியிடம் விஜயன் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனிடையே பள்ளி முடிந்து வந்த மாணவியை 2 நாட்களுக்கு பின்பு மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அந்த மாணவி கர்ப்பம் ஆனார் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.
இதுதொடர்பாக பவானி மகளிர் போலீசில் அந்த மாணவியின் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து விஜயனை போலீசார் கைது செய்தனர். சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வங்கொடுமை செய்ததாக விஜயன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட விஜயனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் 2 பிரிவின் கீழ் தலா ரூ.100 அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 6 மாத ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications