புதுவையில் வாலிபர் கொடூரக் கொலை.. கொலையாளிகளை விரட்டிப் பிடித்த கடலூர் மக்கள்!
புதுவையில் பட்டப்பகலில் வாலிபரை வெட்டிக்கொன்று விட்டு தப்பிய கொலையாளிகளை போலீசார் கடலூர் வரை விரட்டிச் சென்று கைது செய்தனர்.
Recommended Video

புதுச்சேரி: பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த கடை வீதியில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை கடலூர் அருகே பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
புதுவை முத்தியால்பேட்டையில் இருந்து இன்று காலை ஒரு வாலிபர் இரு சக்கர வாகனத்தில் அண்ணாசாலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து காரில் ஒரு கும்பல் விரட்டி வந்தது.
ஜவுளிக்கடை அருகே வந்தபோது காரில் வந்த அந்த கும்பல் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறி அந்த வாலிபர் கீழே சாய்ந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் கத்தியுடன் ஓடிவந்தது. உடனே அந்த வாலிபர் தப்பிக்க அருகில் உள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றார்.

ஓட ஓட விரட்டிக்கொலை
வீட்டு உரிமையாளர் கதவை சாத்திக் கொண்டதால் அவரால் தப்பி ஓடி முடியவில்லை. உடனே அந்த கும்பல் வாலிபரை சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி சென்றனர்.

உயிரிழந்த வாலிபர்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த வாலிபரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்திலேயே அந்த வாலிபர் உயிரிழந்தார்.

சினிமா பாணியில் விரட்டல்
காரில் தப்பி சென்ற கொலையாளிகள் போலீசார் விரட்டினர். கடலூர் சாலையில் செல்லும்போது பல இடங்களில் விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.

மடக்கி பிடித்த மக்கள்
தவளக்குப்பம் அருகே சென்றபோது அந்த காரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
அப்போது காரில் இருந்து 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். மற்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்களை தவளக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கொலை ஏன் நடந்தது?
இதையடுத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பதும், இவர் மீது 2 கொலை வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஜாமீனில் வந்த நபர்
ஒசூரை சேர்ந்த சுதாகர் என்பவை கொலை செய்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பின் அவர் உயிருக்கு பயந்து, புதுச்சேரியில் தலைமறைவாக இருந்துள்ளார்.

பட்டப்பகலில் கொலை
கொளஞ்சியப்பன் புதுச்சேரியில் இருப்பதை தெரிந்து கொண்டு இன்று பழிக்குப் பழியாக வெட்டி கொன்றுள்ளனர். பட்டப்பகலில், மக்கள் நடமாடும் பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரம் புதுவை மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

போலீஸ் விசாரணை
கொளுஞ்சியப்பனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 5 பேரில் சேவல்கொடி , சிவா , சேகர் கடலூர் அருகே கைது செய்யப்பட்டனர். திருப்பதிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகினர் . மணி, கண்ணன் என்பவர்கள் தப்பியோடி விட்டனர். தப்பியோடியவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications