காதலிக்க மறுத்தால் சுவாதி போல கொல்லுவேன்... மிரட்டிய சென்னை வாலிபர் கைது
சென்னை: காதலிக்க மறுத்தால் சுவாதியை போல வெட்டிக் கொலை செய்து விடுவதாக சென்னையில் பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி,விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.தினசரி அந்த மாணவி பள்ளிக்கு வரும் போதும்,போகும் போதும் பின் தொடர்ந்து வந்த செல்வக்குமார் என்ற 23 வயது வாலிபர் தன்னை காதலிக்குமாறும் வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அந்த மாணவியை வழிமறித்த செல்வக்குமார்,வரும் 11ம் தேதிக்குள் தன்னை காதலிக்காவிட்டால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என மிரட்டியுள்ளார்.
இதனை கேட்டு பயந்து போன அந்த மாணவி,தனது தாயிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து காவல்நிலையத்தில் மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் செல்வக்குமார் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கூலி வேலை செய்து வரும் அவர்,சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கைது செய்த செல்வகுமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சுவாதி கொலை நடந்து இன்னும் சில வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில்,பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications