திருமணம் செய்யச் சொன்ன காதலியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரடிட்ய நபர்
திருச்சி: திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்திய காதலி மீது கோபம் அடைந்து அவருடன் உல்லாசமாக இருக்கையில் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய எம்.பி.ஏ. பட்டதாரியை முசிறி போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் உள்ள தா.பேட்டையைச் சேர்ந்தவர் பச்சையப்பன். அவரது மனைவி ஜோதி. பி. இ. படித்துள்ள அவர்களின் மகள் சவுபாக்கியா(26) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.
அவர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் லதாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். தா.பேட்டையை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான விவேகானந்தன்(26) என்பவரும், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து, நாங்கள் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
மேலும் இருவரும் தனிமையில் சென்னையில் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளோம். என்னை திருமணம் செய்து கொள்வதாக விவேகானந்தன் ஆசை வார்த்தை கூறினார். இந்நிலையில் எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்ய வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். அதனால் எனது காதல் நிறைவேறாமல் போய்விடுமோ? என்ற பயத்தில் விவேகானந்தனை சந்தித்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டேன்.
அப்போது அவர், என்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினால் நாம் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதுடன், எனது செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி மிரட்டினார். இது பற்றி எனது அம்மாவிடம் தெரிவித்தேன். இதையடுத்து அவரும், நானும் விவேகானந்தன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டோம்.
அப்போது விவேகானந்தன் மற்றும் அவரது தந்தை குணாளன்(52), தாயார் லட்சுமி (48) ஆகியோர் சேர்ந்து கொண்டு உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டதுடன், விவேகானந்தனை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்கள். எனவே என்னை காதலித்து ஆபாச படம் எடுத்து திருமணம் செய்ய மறுத்த விவேகானந்தன் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேகானந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications