கிஃப்ட் தருவதாக மகாபலிபுரம் கூட்டிச் சென்று சுத்தியலால் அடித்து கொன்ற காதலன்! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மாமல்லபுரம்: சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் இருதயராஜ். இவரதுமகள் ஜெனிபர் புஷ்பா (20) நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் செம்மஞ்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் மாணிக்க தாஸ் என்ற டெய்லரின் மகன் ஜான் மேத்தீஸ் (22) என்பவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் பள்ளிகாலத்திலிருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Youth killed his lover for refusing to getting marriage

இந்த காதல் விஷயம் ஜெனிபர் புஷ்பா வீட்டுக்கு தெரியவந்தது. எனவே பெற்றோருக்காக காதலை விட்டுத்தர ஜெனிபர் தயாரானார். காதலனிடமும் கூறியுள்ளார். நேற்று முன்தினம் ஜெனிபரின் பிறந்தநாள் ஆகும். அப்போது கடைசியாக மாமல்லபுரத்தில் நாம் இருவரும் சந்தித்து விட்டு பின்னர் பிரிந்து விடுவோம் என்று ஜான்மேத்தீஷ் அழைத்துள்ளார்.

ஜெனிபர் முதலில் மறுத்த போதிலும், நினைவு பரிசு ஒன்று தர உள்ளதாகவும் அதை பெற்றுக்கொள்ள வர வரவேண்டும் என்றும் ஜான்மேத்தீஷ் அழைத்துள்ளார்.

இதனை நம்பி ஜெனிபர் மாமல்லபுரத்திற்கு சென்றார். இருவரும் புலிக்குகை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜெனிபரிடம் மீண்டும் ஜான் மேத்தீஸ் வற்புறுத்தினார்.

ஆனால் ஜெனிபர் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை. இதையடுத்து பரிசு பொருளையாவது வாங்கி கொள் என்று கூறியபடி அட்டை பெட்டியை திறந்த ஜான் மேத்தீஸ் உள்ளே வைத்திருந்த சுத்தியலை எடுத்து ஜெனிபர் தலையில் சரமாரியாக ஓங்கியடித்தார்.

இதில் ஜெனிபரின், மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் காதலியின் துப் பட்டாவை எடுத்து அவரது உடல் அருகே சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாமல்லபுரம் போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+