திருவள்ளூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை .. உடல் முட்புதரில் வீச்சு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வாலிபரை கொலை செய்து, உடலை பீப்பாயில் அடைத்து வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் அருகே முட்புதர் ஒன்றில் நேற்று காலை நீலநிற பிளாஸ்டிக் பீப்பாய் இருந்தது. அந்த பீப்பாயை நாய்களும், காகங்களும் சுற்றி சுற்றி வந்தன. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது, புதர் அருகே கிடந்த பீப்பாயை திறந்துபார்த்தனர். அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் அழுகிய நிலையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்தது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்காக அந்த பீப்பாயில் மிளகாய்த்தூள் தூவப்பட்டிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இ.டி.சாம்சன், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும், தொழில் போட்டி அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications