பயங்கரம்.. சாதி மறுப்பு திருமணம் செய்தவரை.. கல்லாலேயே அடித்து கொன்ற கொடுமை.. ஷாக்

செங்கல்பட்டில் இளைஞர் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: சாதி மறுப்பு கல்யாணம் செய்து கொண்டதால், கல்லாலேயே அடித்து ஒரு இளைஞரை கொன்றுள்ளனர் .. இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை பகுதியை சேர்ந்தவர் தேவபிரசாத்... இவருக்கு 26 வயதாகிறது.. மறைமலைநகர் பகுதியில் பாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கடை லீவு என்பதால், அன்று சாயங்காலம் மது அருந்துவதற்காக தனது நண்பர்களான சதீஷ், வினோத் ஆகியோருடன் சென்றுள்ளார்... அப்போது அங்கு விஜி என்பவர் வந்துள்ளார்.. அவருக்கும் தேவபிரசாத்திற்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது.

Youth Murder near Chengalpet

இறுதியில் தேவபிரசாத்தை பெரிய பெரிய கற்களால் அடித்தும் அரிவாளால் வெட்டியும் கொன்றுவிட்டனர்.. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள், அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் தேவபிரசாத் உயிர் பிரிந்தது... கொலைவெறி தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியும் ஓடிவிட்டது.

இதையடுத்து பொதுமக்கள் போடிலீசாருக்கு தகவல் சொல்லவும், மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த கொடூர சம்பவம் குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணையும் மேற்கொண்டனர்.

அப்போதுதான், மாட்டுக் கறி கடை நடத்தி வரும் விஜிக்கும் தேவபிரசாத்துக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.. இதையடுத்து, அந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது அல்லது சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கொலையா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+