கொரட்டூரில் கண்டம் துண்டமாக வெட்டிக்கொல்லப்பட்ட வாலிபர் - போலீஸ் விசாரணை
சென்னை, கொரட்டூர் ஏரியையொட்டி கெனால் சாலையில் இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சென்னை: கொரட்டூர் ஏரியை ஒட்டிய பகுதியில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் பகுதியில் காலையில் நடந்து சென்றவர்களுக்கு அதிர்ச்சி காணப்பட்டது. காரணம் உடல் முழுவதும் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இளைஞர் உடல் கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கொரட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்
கொலை செய்யப்பட்ட வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அவரது உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாயை வரவழைத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் மர்ம நபர்கள் வந்து போன விடியோ இருக்கிறதா என அதன் மூலம் கொரட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
உடல் கிடந்த இடம் அருகே மதுக்கடை உள்ளது. எனவே அங்கு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மதுக்கடை முன்பு கண்காணிப்பு கேமிரா உள்ளது. அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!










Click it and Unblock the Notifications