வேலூரில் பரபரப்பு.. நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கொலை.. போலீஸ் தீவிர விசாரணை
குடியாத்தம் அருகே உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகுமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.
வேலூர்: குடியாத்தம் அருகே உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகுமார் என்பவர் உயிரிழந்துள்ளார். சசிகுமாரை சுட்டது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மாத்தூரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவரது நண்பர்களால் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்தபோது சசிகுமார் உயிரிழந்ததையும் அவரது உடலில் நாட்டுத்துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதையும் கண்டறிந்தனர். இதனால் மருத்துவர்கள் சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். உடனே, மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், போலீஸ் வருவதை அறிந்த சசிகுமாரின் நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், உயிரிழந்த சசிகுமார் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த நபர் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications