ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி திருச்சியில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி திருச்சியில் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
திருச்சி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. திருச்சியில் இன்று நடந்த போராட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலங்காநல்லூரில் தொடர் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம் என அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அரியலூர், திருமானூரில் இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் திரண்ட இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதனிடையே திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே இளைஞர்கள், மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மெரினாவில் தொடர்ந்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இரவிலும் போராடத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி சிந்தாமணி அருகே அண்ணாசிலை அருகே ஜல்லிக்கட்டு நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சுமை தூக்கும் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சதீஷ்குமார் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து தீக்குளிக்க முயன்ற சதீஷ்குமாரை தடுத்து நிறுத்தி கோட்டை போலீசார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications