கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல்- உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு
நாமக்கல்: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் 5 நாள் போலீஸ் விசாரணை முடிவடைந்ததை அடுத்து இன்று நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிபதி மலர்மதி வீட்டில் யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். யுவராஜை மேலும் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
கோகுல்ராஜ் கொலையில் யுவராஜ் உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், யுவராஜூக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் கோகுல் ராஜ் கொலையை யுவராஜ் ஒப்புக்கொண்டதாக கூறி போலீசாரே திசை திருப்ப பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்று யுவராஜ் கூறி வருகிறார் என்று யுவராஜின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த தலித் மாணவர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி தலை வெட்டப்பட்ட நிலையில் பள்ளிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிரபு, அருளரசு உள்பட 22 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதில் 5 பேர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கையெழுத்து போட்டு வருகிறார்கள். 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கை விசாரித்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்குகளை சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி, கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை சூப்பிரண்டுகள் ராஜன், வேலன் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

யுவராஜ் சரண்டர்
இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான யுவராஜ், கடந்த 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். அவரிடம் கடந்த 5 நாட்களாக நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி நாகஜோதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

கார் டிரைவரிடம் விசாரணை
அதேபோல், கடந்த 13ம் தேதி சரணடைந்த யுவராஜின் கார் டிரைவர் அருணிடம் விசாரணை நடத்தினர். அப்போது 'கோகுல்ராஜை கொலை செய்தது யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்?' என்பது குறித்த விவரங்கள் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, யுவராஜிடம் சிபிசிஐடி. போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்செங்கோடு கோவில்
கோகுல்ராஜ் கடத்தப்பட்ட பகுதி என கருதப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்கு யுவராஜை , இன்று அதிகாலையில் அழைத்துச்சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் ஒருமணி நேரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோகுல்ராஜ் சடலமாக கிடந்த இடத்துக்கும் யுவராஜை அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், அங்கு வைத்தும் விசாரணை நடத்தினர்.

ஒப்புக்கொண்டாரா
அருண் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் யுவராஜிடம் சில கிடுக்குப்பிடி கேள்விகளைக் கேட்டதாகவும், அப்போது, யுவராஜ் உண்மையை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. தரப்பில் அதிகாரபூர்வமாக எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

யுவராஜ் ஆஜர்
யுவராஜ் ஆஜர் 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து இன்று சிபிசிஐடி போலீசார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டரை வரவழைத்து யுவராஜிக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிபதி மலர்மதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது யுவராஜிடம் மேலும் சில கேள்விகள் கேட்க வேண்டியிருப்பதாகவும், சில நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என்றும் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

2 நாள் போலீஸ் காவல்
மனுவை விசாரித்த நீதிபதி மலர்மதி, யுவராஜை மேலும் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். கடந்த 5 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் யுவராஜ் பல கேள்விகளுக்கு மவுனம் சாதித்த நிலையில் மேலும் 2 நாள் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி கிடைத்துள்ளது.

சொகுசு கார்கள் பறிமுதல்
யுவராஜின் சொகுசு காரான டாடா சபரி காரையும், அவர் பயன்படுத்தி வந்த 2 ஜீப்புகளையும் பறிமுதல் செய்து நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர். இவற்றை நீதிமன்றத்தில் இன்று ஒப்படைத்தனர்.

உண்மை கண்டறியும் சோதனை
இதனிடையே யுவராஜூக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவராஜை சந்திக்க அவரது மனைவி உள்பட உறவினர்களுக்கு சிபிசிஐடி போலீசார் அனுமதி மறுத்து விட்டதாக அவரது வக்கீல் பழ.ஆனந்த் கூறினார்.

நீதிமன்றத்தில் நிரூபிப்போம்
கோகுல் ராஜ் கொலையை யுவராஜ் ஒப்புக்கொண்டதாக கூறி போலீசாரே திசை திருப்ப பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்று யுவராஜ் கூறி வருகிறார். இன்று பிற்பகலில் யுவராஜ், நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சிபிசிஐடி. போலீசார் வெள்ளை பேப்பரில் யுவராஜிடம் கையெழுத்து பெற்று ஏதாவது எழுதிக்கொண்டு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. கோர்ட்டில் அவர் நிரபராதி என்பதை நிருபிப்போம் என்று கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications